• Jul 24 2025

மாஸ்டருக்கும் மோதிரம் அனுப்பிய Girl friendக்கும் பிரேக்கப்பா...உண்மையை உடைத்த ராபர்ட்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியில் வந்த பிறகு ராபர்ட் மாஸ்டர் அளித்துள்ள பேட்டியில்  தனது காதலி பற்றி பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து 50 நாட்களுக்கு மேல் கடந்து மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கின்றது.21 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த இந்த நிகழ்ச்சியில் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். 

இதனைத் தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார்.  எனினும் இதற்கு அடுத்த கட்டமாக அசல் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார். அதன்பிறகு அடுத்த வாரத்தில் ஷெரினா, அதன் பின்னர் மகேஸ்வரி வெளியேறினர். கடைசியாக நிவாஷினி என வெளியேறிய நிலையில் கடந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் வெளியேறி இருந்தார்.

இந்நிலையில் பிரத்தியோக ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த ராபர்ட் நிறைய விசயங்களை பகிர்ந்துள்ளார்.

ரச்சிதா மீது தனக்கு கிரஸ் இருப்பது உண்மை தான் . அது வெறும் கிரஸ் மட்டும் தான். கிரஸ் வேற, காதல் வேற எனக் கூறி இருந்தார்.ஆனால் நீங்கள் அப்படி பழகினது மாதிரி தெரியவில்லையே.அப்படி இருந்தால் உங்களுக்கு வெளியில் காதலி இருப்பது உண்மையா என தொகுப்பாளர்  கேட்டபோது ஆம்..அது உண்மை தான்.எனக் கூறி இருந்தார்.

அதாவது அந்த காதல் 3வருட காதல்.நாங்கள் நன்றாக தான் பேசி வந்தோம் எனக் கூறி இருந்தார்.பின்னர் பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போது உங்களுக்கு மோதிரம் அனுப்பப்பட்டதே உங்களின் மீது வெறுப்பிலா..இல்லாவிடில் அந்த காதல் பிரேக்கப் ஆகிவிட்டதா எனக் கேட்கும் போது ...நானும் அந்த மோதிரம் வீட்டிற்குள் வந்ததும் பயந்து தான் போனேன்.அது அவள் தன்னுடைய நினைவிற்காக தான் அனுப்பிவிட்டாளாம்.நான் வெளியில் வந்ததும் அவளிடம் பேசி இருந்தேன்.அவள் நன்றாக தான் பேசினாள்.அத்தோடு எங்கள் காதல் பிரேக்கப் ஆகவில்லை  எனக் கூறி இருந்தார்.

அப்படியானால் உங்களுக்கு எப்போது திருமணம் என்று கேட்டதற்கு பதிலளித்த ராபர்ட்..என் கரியரில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கிறேன்...நிறைய கெமிட்மன்ஸ் இருக்கு அது எல்லாம் முடிந்தால் தான் எனக்கு திருமணம் எனக் கூறியுள்ளார்.


Advertisement

Advertisement