• Jul 25 2025

பிக்பாஸ் சீசன் 7 இல் முக்கிய போட்டியாளராக களமிறங்கும் பஸ் ஓட்டுநர் ஷர்மிகா- கமல்ஹாசன் தான் காரணமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் நிறைய ரியாலிட்டி ஷோக்கள் உள்ளது, அதில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மக்களிடையில் மவுசு உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களுக்கு சினிமாவில் நல்ல எதிர்காலம் அமைந்து வருகிறது. அப்படி இதுவரை இதில் கலந்துகொண்ட பிரபலங்கள் சினிமாவில் ஜொலித்து வருகிறார்கள்.


கடந்த 6வது சீசனில் விக்ரமன் மற்றும் அசீம் இருவரில் ஓருவர் வெற்றியாளர் என வர மக்கள் பலரும் விக்ரமன் தான் வருவார் என எதிர்ப்பார்த்தார்கள். ஆனால் அசீம் தான் 6வது சீசன் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார்.


இந்த நிலையில் 7வது சீசன் அக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. இதில் தொகுப்பாளினி ஜாக்குலின்,நடிகர் தினேஷ்,மணிமேகலை எனப் பலரும் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்பொழுது பஸ் ஓட்டுநர் ஷர்மிகாவும் களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கமல்ஹாசன் அண்மையில் ஷர்மிகாவுக்கு புதிய கார் வாங்கிக் கொடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement