• Jul 25 2025

ஃபேமிலியை உருவாக்குறதுக்குன்னே பிக்பாஸிற்கு வந்தாரு- ராபர்ட் மாஸ்டரை கிராண்ட் ஃபினாலேவில் கலாய்த்த கேமரா வாய்ஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கிராண்ட் ஃபினாலே நேற்றைய தினம் நடந்துள்ளது. நடிகர் கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.இதில் டைட்டில் வின்னராக நடிகர் அசீம் தேர்வு செய்யப்பட்டார். விக்ரமன் இரண்டாம் இடத்தை பெற்றார்.

இதனிடையே ஆட்டம், பாட்டம் என சிறப்பாகவும் கலகலப்பாகவும் போன கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் கேமராவே பேசுவது போல், ஒவ்வொரு போட்டியாளரையும் ஒரு குரல் கலாய்த்தது. அதாவது பிக்பாஸ் கேமரா, தன் கோணத்தில் இருந்து ஒவ்வொரு போட்டியாளரிடமும் பேசுவதாக இந்நிகழ்வு அமைந்தது.


 இதில் தான் ராபர்ட் மாஸ்டரை பார்த்து பேசும்போது, “எல்லாரும் ஃபேமிலிக்காக ஷோவுக்கு வருவாங்க. ஆனா இவரு ஃபேமிலியை உருவாக்குறதுக்குன்னே ஷோவுக்கு வந்துருக்காரு.


 கப் அடிக்க வந்தவங்களுக்கு மத்தியில சைட் அடிக்க வந்த இவர் என் இனம். எந்திரன் படத்துல வசி உருவாக்குனா அது ரோபட்டு, ரச்சிதா மேடத்தோட வசீகரத்தால உருவானா அதுதான் ராபர்ட்டு..” என கலாய்த்த குரல், பின்னர் ரச்சிதாவை பார்த்து, “ரச்சிதமே..  ரச்சிதமே.. மாஸ்டர் மனச கலைக்கும் மந்திரமே..” என பாட்டு பாட, ரச்சிதா உட்பட அரங்கமே கலகலப்புடன் சிரித்தது.


Advertisement

Advertisement