• Jul 25 2025

நடிகையை திருமணம் செய்த சூரரைப் போற்று ஒளிப்பதிவாளர்-கலக்கலாக வெளிவந்த புகைப்படங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சூரரைப் போற்று திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றி எல்லோர் மத்தியிலும் கவனம்  பெற்றவர் நிகேத் பொம்மி ரெட்டி.


சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் இசையில் உருவான சூரரைப்போற்று திரைப்படம் தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. 

இந்த நிலையில் இந்த படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமாகிறது.சூர்யா கேரக்டரில் அக்சயகுமார் நடிக்க இருப்பதாகவும் அபர்ணா பாலமுரளி கேரக்டரில் ராதிகா மதன் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.



இந்நிலையில் சூரரைப் போற்று திரைப்படத்தில் தன்னுடைய ஒளிப்பதிவுக்காக கவனம் பெற்ற நிகேத் பொம்மி ரெட்டி, தற்போது தன்னுடைய திருமணப் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.



அவர் தனது நீண்டகால தோழியும் நடிகையுமான மெர்சி ஜானை திருமணம் செய்துகொண்டுள்ளார். மெர்சி ஜான் தெலுங்கு சினிமாவில் பிரபல டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் பணியாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்க வியடம்.




Advertisement

Advertisement