• Jul 26 2025

"கல்யாணம் பண்ணிக்கலாமா?".. ரசிகரின் கேள்விக்கு ஸ்ருதிஹாசன் என்ன பதில் சொல்லியிருக்காரு பாருங்க..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். சமூக வலை தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில்  இவரும் முதன்மையானவர். வேலை செய்வது, உணவு சமையல் குறிப்புகளைப் பகிர்வது, தனது பூனை கிளாராவுடன் விளையாடுவது, மற்றும் மேக்கப் மற்றும் பேஷன் சார்ந்த  போட்டோ ஷூட் ஆகியவற்றை சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக பகிர்வதை ஸ்ருதி ஹாசன் வழக்கமாக  கொண்டுள்ளார்.

ஸ்ருதிஹாசன் நடிப்பில் கடைசியாக 'லாபம்' திரைப்படம் தமிழில் வெளியானது. அடுத்ததாக ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக பிரபாஸுடன் இணைந்து 'சலார்'  படத்தில் நடிக்கிறார். இந்த படம் ஒரே நேரத்தில் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் படமாக்கப்படுகிறது. மற்ற தமிழ், மலையாளம், இந்தியில் டப் செய்யப்படுகிறது.

கே ஜி எப் இயக்குர் பிரசாந்த் நீல் இந்த படத்தை இயக்குகிறார். புவன் கவுடா ஒளிப்பதிவு செய்ய, ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரிக்கிறார்கள்.


இந்நிலையில் நடிகை ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வடிவில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "நாம் திருமணம் செய்து கொள்ளலாமா? என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார் . இதற்கு பதில் அளித்த ஸ்ருதிஹாசன், "சிரித்துக் கொண்டே Because.." என பதில் அளித்து தமது ஆண் நண்பர் சாந்தனு மீது ஸ்ருதிஹாசன் சாய்ந்து கொண்டார்.





Advertisement

Advertisement