• Jul 25 2025

சொந்தமென்று வந்தவளால்.. சொந்தம் கொண்டாட முடியுமா..? -கிழக்கு வாசல் சீரியலில் இருந்து வெளியாகிய புதுப் ப்ரோமோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை ராதிகாவின் ராடான் என்டர்டெயின்மென்ட் தயாரிக்க விஜய் டிவி முதன்முறையாக ஒரு சீரியல் ஒளிபரப்பாகி இருக்கிறது.கிழக்கு வாசல் என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய தொடரில் சஞ்சீவ் மற்றும் ரேஷ்மா முரளிதரன் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடிக்க இருந்தார்கள். ஆனால் சில நாள் படப்பிடிப்பு செல்ல திடீரென சஞ்சீவ் தொடரில் இருந்து விலகப்பட்டார்.

அவருக்கு பதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் வெங்கட் நாயகனாக நடிக்க கமிட்டானார்.இந்த தொடரின் மூலம் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் சின்னத்திரையில் நடிக்க தொடங்கியுள்ளார்.

இந்த சீரியலின் முதல் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது. அத்தோடு தத்தெடுத்து வளர்க்கும் பெண் தன்னுடைய உறவினர்களால் எவ்வளவு கஷ்டத்தை அனுபவிக்கிறார் என்பதையே இந்த சீரியல் எடுத்துக்காட்டவுள்ளது.

இப்படியான நிலையில் இந்த சீரியல் குறித்து புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் கதாநாயகி தத்தெடுத்த பிள்ளை என்ற காரணத்தினால் சொந்தப் புறக்கணிப்பதை நினைத்து வருந்தவதைக் காணலாம். இந்த சீரியல் ஆகஸ்ட் 7ம் தேதியில் இருந்து ஒளிபரப்பப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement