• Jul 25 2025

உங்களுக்கு நடக்கலனா வேறு யாருக்கும் நடக்காதா? அபிராமிக்கு பதிலடி கொடுத்த சனம் ஷெட்டி!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

சென்னை கலாஷேத்ராவில் மாணவிகளிடம் தவறாக நடந்ததாக குற்றம்சாட்டப்பட்ட ஹரிபத்மன் என்ற பேராசிரியர் கைதாகி சிறையில் இருக்கிறார். விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக செய்தி வெளியான நிலையிலும் பிரபல நடிகர் அபிராமி வெங்கடாசலம் அவருக்கு ஆதரவாக பேட்டி அளித்து வருகிறார்.

அந்த கல்லூரியில் தான் நானும் படித்தேன். அவர் சிறந்த ஆசிரியர், எங்களிடம் தவறாக நடந்துகொள்ளவில்லை. தற்போது மாணவிகள் பலிகடா ஆக்கப்படுகின்றனர் என அபிராமி பேசி இருந்தார்.

இந்நிலையில் தற்போது ட்விட்டரில் சனம் ஷெட்டி அபிராமிக்கு பதிலடி கொடுத்து பதிவிட்டு இருக்கிறார்.

"உங்களுக்கு நடக்கவில்லை என்பதற்காக, அவர்களுக்கு நடக்கவில்லை என்று அர்த்தமா. ஒவ்வொரு ஆசிரியரும் என்ன செய்கிறார்கள் என உங்களுக்கு உறுதியாக தெரியுமா. நீங்கள் ஏன் ஒருதலை பட்சமாக இருக்கீங்க" என அபிராமிக்கு கேள்வி எழுப்பி இருக்கிறார் சனம் ஷெட்டி. 

Advertisement

Advertisement