• Jul 24 2025

அதிகாரப்பூர்வமாக வெளியாகிய கேப்டன் மில்லன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி- அடடே சூப்பர் அப்டேட்டாக இருக்கே

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகை தாண்டி, பாலிவுட் - ஹாலிவுட் என தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தி உலக அளவில் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தையே வைத்துள்ளள நடிகர் தான் தனுஷ். இவர் தற்பொழுது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில்,'கேப்டன் மில்லர்'நடித்துள்ளார்.

இந்தப்படம் மூன்று பாகங்களாக எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது சுதந்திரம் வாங்கிய காலகட்டத்திற்கு முன்பு ,அதாவது 1940 வருடங்களில் முதல் பாகம் உருவாகி வருவதாகவும், இரண்டாம் பாகம் 1990 காலகட்டத்தில் நடப்பது போன்றும், மூன்றாம் பாகம் சமீபத்திய காலகட்டத்திற்கு ஏற்ற போல் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 


ஆனால் இதுவரை இந்த தகவலை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.மேலும் இந்த படத்தில், தனுஷுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார். நிவேதிதா, ஜான் கொக்கேன், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், சந்தீப் கிஷன், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

 ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாக்கி வரும், 'கேப்டன் மில்லர்' படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இது ஒரு பீரியாடிக் கதை அம்சம் கொண்ட படம் என்பதால், மலை, காடு, போன்ற இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. சமீபத்தில் மதுரையில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது.


இந்த படத்தில் தனுஷின் கதாபாத்திரம் குறித்து வெளியாகியுள்ள தகவலில், தனுஷ் போராளியாக நடிப்பதாக கூறப்படுகிறது.அதே போல் அவ்வப்போது, இப்படம் குறித்த சுவாரசிய தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வரும் நிலையில், தற்போது 'கேப்டன் மில்லர்' ஃபர்ஸ்ட் லுக் குறித்த தகவலை சத்யஜோதி பிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது.


 அதன்படி கேப்டன் மில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ஜூன் 30-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த தகவல் தனுஷின் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement