• Jul 26 2025

நிச்சயதார்த்த தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்த பிரபலங்கள்... குவியும் வாழ்த்துக்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்து வருபவர் நடிக சிரஞ்சீவி. இவரின் குடும்பத்தில் அதிகமானோர் சினிமாத் துறையில் தான் பணியாற்றி வருகின்றார்கள். 


இந்நிலையில் சிரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகன் ஆகிய வருண் தேஜ் நடிகை லாவண்யா திரிபாதியை காதலித்து வருகின்றார். இந்தக் காதல் தற்போது கல்யாணத்திலும் முடிய இருக்கின்றது. 

அந்தவகையில் வருண் தேஜ் மற்றும் நடிகை லாவண்யா திரிபாதி இருவருக்கும் வருகிற ஜூன் 9-ஆ ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாகவும், திருமணம் இந்த வருடத்தின் இறுதியில் நடைபெறும் எனவும் ஏற்கெனவே தகவல் வெளியாகி இருந்தது.


இதனை தற்போது கார்ட் வெளியிட்டு அதன் மூலமாக உறுதிப்படுத்தியுள்ளனர். அதாவது வருகிற நாளை இவர்களது திருமண நிச்சயதார்த்த நிகழ்வு ஐதராபாத்தில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இந் நிகழ்வில் அவர்களின் குடும்ப உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்துகொள்வார்கள் எனவும் கூறப்படுகின்றது.


எது எவ்வாறாயினும் இந்த ஜோடிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement