• Jul 26 2025

பிக்பாஸ் வீட்டிற்குள் உள்நுழைந்த பிரபலங்கள்...கேட்கப்பட்ட கேள்வியால் ஷாக்கான அசீம்..வெளியானது ப்ரமோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

உலகம் முழுவதும் ரசிகர்களைக்கொண்ட நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.தமிழில் முதல் சீசனின் பெரிய வெற்றியை தொடர்ந்து 5 சீசன்கள் தொடர்ந்து ஒளிபரப்பாக இப்போது 6வது சீசனும் முடிவுக்கு வரப்போகிறது.

இந்த 6வது சீசனில் பிக்பாஸ் குழுவினர் போட்டியாளர்களை தேர்வு செய்வதில் கொஞ்சம் வித்தியாசம் காட்டியுள்ளனர், சில போட்டியாளர்கள் நமக்கு பரீட்சயப்படாதவர்களாக இருந்தனர்.இருப்பினும் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அனைவரும் தெரிந்த முகமாக மாறிவிட்டனர்.

மேலும் கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் வருகை தந்து ஹவுஸ்மேட்ஸை உற்சாகப்படுத்தி வருகின்றனர். இப்படியான நிலையில் இறுதியாக இந்த வீட்டிலிருந்து ஏடிகே வெளியேறினார்.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.அதில் பிரியங்கா மற்றும் மா.கா.பா வந்து பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து கலகலப்பாக பேசி இருந்த நிலையில் அசீமிடமும் ஒரு கேள்வி கேட்க அசீம் அப்படியே ஷாக்காகின்றார்.அதன் பிறகு சூப்பர் சிங்கர் பிரபலங்கள் உள்நுழைந்து பாட்டுப்பாடி அசத்துகின்றனர்.

இதோ அந்த ப்ரமோ...



Advertisement

Advertisement