• Jul 25 2025

முன்னணி நடிகர்களை மிஞ்சும் அளவிற்கு... 11படங்களை கைவசம் வைத்துள்ள சார்லி..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

கே.பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான 'பொய்க்கால் குதிரை' படத்தின் மூலம் 1983-ல் சினிமாவில் அறிமுகமாகி முன்னணி நகைச்சுவை நடிகராகவும், குணசித்திர நடிகராகவும் உயர்ந்தவர் தான் சார்லி. அதுமட்டுமல்லாது தமிழ் சினிமா வரலாற்றில் காமெடி நடிகர்கள் பட்டியலில் முக்கிய இடத்தையும் பிடித்துள்ளார். 


அதிலும் குறிப்பாங்க விஜய்யின் 'ப்ரண்ட்ஸ்' படத்தில் வந்த கோவாலு கதாபாத்திரம் இன்றளவும் ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் அவரது நடிப்பு யாராலும் மறக்க முடியாது. அதுமட்டுமல்லாது சினிமாவில் நகைச்சுவை பற்றி ஆராய்ச்சி செய்து எம்.பில் பட்டம் பெற்றுள்ளார். இ


அந்தவகையில் இதுவரை 800 படங்களில் இவர் நடித்துள்ளார். அத்தோடு சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த சார்லி தற்போது மீண்டும் தனது இரண்டாவது ரவுண்ட் தொடங்கி உள்ளார். அதாவது சமீபத்தில் வெளியான `கொன்றால் பாவம்' படத்தில் சார்லி நடித்த கதாபாத்திரத்துக்கு பெரிய பாராட்டுகள் கிடைத்தன. 


இந்நிலையில் தமிழ் சினிமாவில் தற்போது அதிக படங்கள் கைவசம் வைத்து பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இடம்பெற்ற பேட்டியில் சார்லி கூறும்போது "3 தலைமுறை நடிகர்களுடன் நடித்து விட்டேன். சிறிய கதாபாத்திரங்கள் வேண்டாம் என்று சில காலம் ஒதுங்கி இருந்தேன். இப்போது எனக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்கள் வருவதால் நடிக்கிறேன். 11 படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறேன்" என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement