• Jul 23 2025

ஜெயிலர் படத்தில் நடித்த நடிகர் ஜாஃபர் சாதிக்கிற்கு ரஜினிகாந்த் கொடுத்த ஹாஸ்லி கிப்ட் என்ன என்று பாருங்க- அடடே சூப்பராக இருக்கே

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. அதுமட்டுமின்றி இப்படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்கள் பெரிய அளவில் பேசப்பட்டன. 


 இந்த படத்தில் நடித்திருந்த கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் மோகன்லால் இருவரும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தனர். தற்போது அதே வரிசையில் நடிகர் ஜாஃபர் சாதிக் இடம் பெற்றுள்ளார்.இதற்கு முன்பு ஓடிடி-யில் வெளியான பாவ கதைகள் என்ற வெப் சீரிஸில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கிய கதையில் நடிகர் ஜாஃபர் சாதிக் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் .


மேலும் தன்னுடைய முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். குறிப்பாக இவருடைய தோற்றமும் ,வித்தியாசமான நடிப்பும் தான் ரசிகர்களை ஈர்த்துள்ளது. தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படத்திலும் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் ஜாபர் நடித்திருந்தார் .


மேலும் ஜெயிலர் படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இவருக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் பயன்படுத்திய கூலிங் கிளாஸை கிப்ட் ஆக கொடுத்து இருக்கிறார்."நான் கேட்டேன் அவர் குடுத்துட்டாரு.." என ஜாபர் அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அவை வைரலாகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement