• Jul 23 2025

படகின் மீது முட்டி போட்டு பிக்பாஸ் அபிராமி என்ன செய்கிறார் என்று பாருங்க- வைரலாகும் போட்டோஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

2018ம் ஆண்டு நோட்டா படத்தில் அறிமுகமான அபிராமி வெங்கடாச்சலம், ஜீ5 ஓடிடியில் வெளியான களவு படத்திலும் நடித்திருந்தார். அதன் பின்னர் 2019ல் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் தோழியாக நடித்து இருந்தார். மாதவனின் ராக்கெட்ரி தி நம்பி விளைவு, சியான் விக்ரமின் துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்ட அபிராமி வெங்கடாச்சலம் அந்த வீட்டில் பாதிக் கிணறை தாண்டிய நிலையில், வெளியேறினார்.


கமல் ஆரம்பித்து அதன் பின்னர் சிம்பு தொகுத்து வழங்கிய பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 24 மணி நேரமும் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தினார். பிக் பாஸ் போட்டியாளர் நிரூப்பின் முன்னாள் காதலி என்பதையும் அந்த ஷோவில் அவர் ரிவீல் செய்திருந்தார்.


கலாக்‌ஷேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் புகார் கொடுக்கப்பட்டதாக பேராசிரியர் மீது புகார் எழுந்த நிலையில், அந்த ஆசிரியர் மற்றும் கலாக்‌ஷேத்ரா பள்ளிக்கு ஆதரவாக வாய் விட்டு வசமாக வாங்கிக் கட்டிக் கொண்டார் அபிராமி வெங்கடாச்சலம். இந்த விவகாரத்தில் மாணவிகள் மீது தவறு என்று சொல்லவில்லை என்றும் ஆனால், அவர்கள் பலி கடா ஆக்கப்படுகின்றனர் என்றும் விளக்கம் கொடுத்து ஏகப்பட்ட ட்ரோல்களுக்கு ஆளானார் அபிராமி.


அதன் பிறகு அந்த விவகாரத்தில் அமைதி காக்க ஆரம்பித்த அபிராமி வெங்கடாச்சலம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து செல்ஃபி போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், லேட்டஸ்ட்டாக பீச்சில் படகு மீது ஏறிக்கொண்டு முட்டிப் போட்டு கடலை பார்த்தபடி யோகா செய்யும் வொர்க்கவுட் போட்டோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் லைக்குகளையும் ஹார்டின்களையும் பதிவிட்டு வருகின்றனர். 


Advertisement

Advertisement