• Jul 24 2025

பாடகர்கள் கூட்டத்துக்குள் யுவனின் மகளை கண்டுபிடித்த ரசிகர்கள்; என்ன கூறியுள்ளார்கள் பாருங்கள்

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பின்னணி இசையில் தனி ராஜாங்கம் நடத்தி கொண்டிருந்த இளையராஜாவுக்கு பின் அந்த ராஜாங்கத்தின் செல்லப்பில்ளை ஆனவர் யுவன் ஷங்கர் ராஜா. தீம் மியூசிக்கில் யுவன் சங்கர் ராஜாவை உலகம் முழுவதும் திரும்பி பார்க்க வைத்த திரைப்படமாக ‘பில்லா’ அமைந்தது. 


மேலும் தற்காலத்தில் தமிழ்த் திரையுலகில் பின்னணி இசையில் யுவனை விட்டால் வேறு ஆள் கிடையாது என்பதை தன் அடுத்தடுத்த திரைப்படங்களின் வாயிலாக சொல்லி வருகிறார். குறிப்பாக யுவன் - அஜித் கூட்டணியில் உருவான ’மங்காத்தா’ திரைப்படத்தின் தீம் மியூசிக் இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒன்றாக இருந்து வருவதை நாம் பார்க்கலாம்.


அதுமட்டுமல்லாது ’7ஜி ரெயின்போ காலனி’ படத்தில் யுவனின் பின்னணி இசையை இன்றுவரை நம்மால் மறக்க முடியாது. இவ்வாறாக 90களில் ஆரம்பித்த இவரது இசைப் பயணம் இப்போதும் வெற்றிகரமாக தொடர்ந்த வண்ணம் தான் இருக்கிறது. 

அந்தவகையில் கடைசியாக இவரது இசையமைப்பில் 'காப்பி வித் காதல், லவ் டுடே' போன்ற படங்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் படங்களுக்கு இசையமைத்த வண்ணம் தான் இருக்கின்றார்.


இதற்கு இடையில் சமீபகாலமாக யுவன் ஷங்கர் ராஜாவின் இசைக் கச்சேரிகள் பலவும் நடந்து வருகிறது. அவ்வாறு நேற்றிரவும் ஒரு கச்சேரி இடம்பெற்றிருந்தது. இக் கச்சேரி முடிந்ததும் அதில் பங்குபெற்ற பாடகர்கள் ஒன்றாக இணைந்து பாடல்கள் பாடி கொண்டாடியுள்ளார்கள். 

அந்த சமயத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை பாடகி ரக்ஷிதா தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில் யுவனின் மகளும் உள்ளார். அவரைப் பார்த்த ரசிகர்கள் "அட யுவனின் மகளா இவர், ஆள் அடையாளமே தெரியாமல் நன்றாக வளர்ந்துவிட்டாரே" எனக் கமெண்ட் செய்து வருகிறார்கள்.


Advertisement

Advertisement