• Jul 25 2025

தன்னுடைய பெற்றோர் யார் என்ற உண்மையை அறிந்த செல்லம்மா- மேகா செய்த சூழ்ச்சி- Chellamma Promo

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக  ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் செல்லம்மா. கணவனால் கைவிடப்பட்ட பெண் தன்னுடைய வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.

சீரியலின் கதைப்படி மாணிக்கம் செல்லம்மாவைக் கடத்திக் கொண்டு போய் திருட்டுக்கல்யாணம் பண்ணப்பார்த்ததை சித்து தடுத்து விட்டார். மறுபுறம் மேகா சொத்து முழுவதையும் தன்னுடைய அம்மாவின் பெயரில் இருந்து மாற்றியெழுதி வாங்கி விட்டார்.


இப்படியான நிலையில் அடுத்த வாரத்திற்கான புதுப் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் மேகா செல்லம்மாவிடம் சென்று உன்னுடைய அம்மா அப்பா சாகல மகேந்திரனும் அவரது மனைவியும் தான் உன்னோட அப்பா அம்மா இந்த விஷயத்தை சொல்லச் சொல்லி அவங்க கிட்டையே நிறைய தரம் சொல்லி இருக்கிறேன்.

ஆனால் அவங்க தான் உன் கிட்ட சொல்லல என்று சொல்கிறார். இதைக் கேட்ட செல்லம்மா அதிர்ச்சியடைந்து மகேந்திரத்திடம் சென்று நீங்க தான் என்னுடைய அப்பா அம்மாவா என்று கேட்க இருவரும் அதிர்ச்சியடைகின்றனர். இத்துடன் இன்றைய ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement