இயக்குநர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள திரைப்படம் ஜவான். இப்படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அத்தோடு தீபிகா படுகோன், சஞ்சய் தத் ஆகியோர் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். அந்தவகையில் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படம் வரும் செப்டம்பர் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருக்கின்றது.
இதனை முன்னிட்டு நேற்றைய தினம் 'ஜவான்' பட இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நேற்றைய தினம் நடைபெற்றது. இதில் பிரபல இந்த விழாவில் அட்லி, நயன்தாரா, விஜய் சேதுபதி,ஷாருக்கான் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். அதுமட்டுமல்லாது ரசிகர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் தனியார் கல்லூரி பேராசிரியரான ராமகிருஷ்ணன் இந்த இசை வெளியீட்டு விழாவில் தனது குடும்பத்துடன் பங்கேற்று திரும்பிய போது சோமங்கலம் அருகே மாட்டின் மீது பைக் மோதி பைக்கில் பயணித்த 4பேரும் கீழே விழுந்தனர். இதில் லாரி மோதி குழந்தை உயிரிழந்துள்ளது.
இந்த விடயமானது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமல்லாது, கவலையையும் கொடுத்துள்ளது. இவ்வாறாக ஜவான் பட இசை வெளியீட்டு விழாவிற்கு வந்து விட்டு திரும்பிய குழந்தையின் உயிரிழப்பிற்கு பலரும் தங்களது இரங்கலினைத் தெரிவித்து வருகின்றனர்.
Listen News!