• Jul 26 2025

சில்மிஷம் எல்லாம் நல்லா இருக்கு மகளுக்கு தான் உதவி செய்யமாட்டார்- ராபர்ட் மாஸ்டர் குறித்த பேசிய பிரபல டான்ஸ் மாஸ்டர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 ஆனது ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து சுவாரஸியத்திற்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. இதில் அனைவருக்கும் பரீட்சயமான முகமாக கலந்து கொண்டிருப்பவர் தான் ராபர்ட் மாஸ்டர்.இவர் வனிதா விஜயகுமாரின் முன்னாள் காதலன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார்.நிகழ்ச்சி தொடக்கத்திலிருந்து இவருக்கு ரக்ஷிதாவின் மீது ஒரு கண் இருக்கின்றது.காதலுக்கு வயது இல்லை என்று சொல்லி கொண்டு அவர் செய்யும் சேட்டைகளுக்கு அளவே இல்லை. இவர், எனக்கு கேர்ள் பிரென்ட் இல்லை. அதனால் நம்முடைய இந்த பிரென்ட் வெளியில் போயும் தொடர வேண்டும் என்றெல்லாம் ரக்ஷிதாவிடம் கூறியிருந்தார்.


அத்தோடு தனக்கு திருமணம் ஆகி மகள் இருக்கிறார் என்றும் தன் மனைவி தன்னை விட்டு சென்றுவிட்டார் என்றும் தன் மகளுக்கு நான் தான் அப்பா என்று தெரியாது தன்னை Uncle என்று தான் அழைக்கிறார் என்றும் கூறி இருந்தார். இத்தனை இருந்தும் ரஷிதாவிடம் ராபர்ட் மாஸ்டர் தொடர்ந்து வழிந்துகொன்டு தான் வருகிறார்.

இந்த நிலையில் ராார்ட் மாஸ்டர் குறித்து  பிரபல டான்ஸ் மாஸ்டர் ராதிகா  பல உண்மைகளை கூறி இருக்கிறார். அதில், ராபர்ட் நல்ல திறமைசாளி தான் ஆனால், ரச்சிதாவுடன் trpகாக தான் இதையெல்லாம் செய்கிறார்கள்.


ஆனால்,ரச்சிதா இந்த விஷயத்தை மிகவும் அழகாக கையாண்டு வருகிறார்.ராபர்ட் மாஸ்டர் தன் மகள் குறித்து பேசுவதை பார்க்கும் போது சந்தோஷமாகத்தான் இருந்தது ஆனால் பிக் பாஸ் வீட்டுக்குள் தான் அவர் மகளைப் பற்றி சொல்ல வேண்டுமா அவசியம் இல்லை அவர் மகள் எங்கே இருக்கிறார் என்பது அவருக்கு தெரியும் நேரில் போய் சென்று சொல்லி இருக்கலாம், மாதா மாதம் எதாவது பணம் அனுப்பி இருக்கலாம் என்று குற்றம் சாட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement