• Jul 24 2025

சின்னத்தம்பி பாவனி திரும்ப வந்தாச்சு- ஆசைக் காதலன் அமீருடன் வெளியிட்ட ரொமாண்டிக் போட்டோஸ்- குவியும் லைக்குகள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டைவால் குருவி, சின்னத்தம்பி போன்ற சீரியல்களில் நடித்து வந்தவர் பாவனி ரெட்டி, இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் போட்டியாளராக களமிறங்கினார்.


 அந்த சீசனில் இவருடன் சக போட்டியாளராக கலந்துகொண்ட அமீர், பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போதே பாவனியை துரத்தி துரத்தி காதலித்து வந்தார். ஆனால் அந்த சமயத்தில் அமீரின் காதலை ஏற்காமல் இருந்து வந்தார் பாவனி.


இதையடுத்து பிக்பாஸ் ஜோடிகள் என்கிற நடன நிகழ்ச்சியில், அமீரும், பாவனியும் ஜோடியாக களமிறங்கினர். அந்த சமயத்தில் இருவரும் நெருங்கிப் பழகத் தொடங்கியதை அடுத்து பாவனியும் அமீரை காதலிக்க தொடங்கினார்.இதனை இருவருமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர்.


தொடர்ந்து இருவரும் கெரியரில் தமது கவனத்தை செலுத்தி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர்கள் தமது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் பதிவிட்டு வருவார்கள். அந்த வகையில் தற்பொழுது நீல நிற ஆடையில் இருவரும் ஒன்றாக கோயிலுக்குச் சென்றுள்ளனர்.


இது குறித்த புகைப்படங்களை தமது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இதனைப் பார்த்த ரசிகர்கள் பல்வேறு விதமான பாசிட்டிவ் விமர்சனங்களையும் குவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



















Advertisement

Advertisement