• Jul 24 2025

நடிகர் ராம் சரணின் மகளுக்கு பெயர் வைச்சாச்சு- கியூட்டான பெயர் வைத்த சிரஞ்சீவி குடும்பத்தினர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கு திரையுலகில் முன்னாடி நடிகராக இருக்கும் ராம் சரணுக்கும்- அவரது மனைவி உபாவனாவுக்கும்  திருமணம் ஆகி பத்து வருடங்களுக்கு மேல் ஆகும் நிலையில் கடந்த ஜூன் 20ஆம் தேதி,இருவருக்கும் அழகிய குழந்தை பிறந்தது.பல வருடங்களுக்கு பின்னர் பெற்றோர் ஆன சந்தோஷத்தை ராம் சரணும், தாத்தாவான சந்தோஷத்தை சிரஞ்சீவியும் கொண்டாடினார்கள். 

மேலும் ரசிகர்களுடனும் இந்த சந்தோஷத்தை பரிமாறி கொண்டனர். ராம் சரண் ஷூட்டிங் பணிகளை ஓரம் கட்டி வைத்துவிட்டு, தன்னுடைய மகளை கவனித்து வருவதாகவும் தெலுங்கு மீடியாக்களில் செய்திகள் வெளியானது.


உபாசனா ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து கடந்த 23ஆம் தேதி டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு செல்லும்போது, செய்தியாளர்களிடம் பேசிய ராம்சரண் குழந்தையின் பெயரை நானும் உபாசனாகவும் சேர்ந்து முடிவு செய்துள்ளோம் விரைவில் இதுகுறித்து அறிவிப்பை வெளியிடுவோம் என தெரிவித்தனர்.


அதன்படி சற்று முன்னர், ராம்சரண் - உபாசனா ஜோடி, தங்களின் குழந்தையின் தொட்டில் போடும் விழாவை நிறைவு செய்த பின்னர், குழந்தைக்கு க்ளின் காரா கோனிடேலா என வித்தியாசமாக, வைத்துள்ள பெயரை அறிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து ராம் சரணுக்கும் அவரின் மனைவிக்கும் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



Advertisement

Advertisement