• Jul 24 2025

கண்ணம்மா இறந்ததை அடுத்து அவரின் வீட்டிற்கு மகளாக செல்லும் சித்ரா- பாரதி கண்ணம்மா சீரியலின் புதிய ப்ரோமோ

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவி தொலைக்காட்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட சீரியல் 'பாரதி கண்ணம்மா'. இந்த சீரியலில் ஹீரோவாக நடிகர் அருண் பிரசாத் நடித்து வந்ததோடு கதாநாயகியாக வினுஷா தேவி நடித்து வந்தார். இந்த சீரியல் முதல் பாகம் முடிவடைந்ததைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் ஆரம்பித்துள்ளது.

இதில் சிப்பு சூரியன் ஹீரோவாகவும், ஹீரோயினாக வினுஷாவே நடிக்கிறார்.கடந்த முறை சிட்டியை மையமாக வைத்து கதை நகர்ந்த நிலையில் இந்த முறை கிராமத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.


மேலும் இந்த சீரியலில் வினுஷா தேவி சித்ரா என்னும் கதாப்பாத்திரத்திலும் ரேஷ்மா கண்ணம்மா என்னும் கதாப்பாத்திரத்திலும் நடித்த வந்தார்.கடந்த இரண்டு நாட்களாக இருவரும் பஸ்ஸில் பயணம் செய்யும் போது உரையாடுவதாகவே அமைந்திருந்தது.குறிப்பாக கண்ணம்ம தன்னைப் பற்றி யார் என்று சித்திராவிடம் சொல்லி வருகின்றார்.

இப்படியான ஒரு நிலையில் கண்ணம்மாவிற்கு வில்லன்களால் கத்திக் குத்து விழுந்து விடுகின்றது. இதனால் கண்ணம்மா தான் இறக்கும் நேரத்தில் சித்ராவை கண்ணம்மாவாக போகச் சொல்லி கூறுகின்றார். இதனால் கண்ணம்மாவின் வேண்டுகோளை ஏற்று சித்ரா கண்ணம்மாவாக அவருடைய வீட்டிற்கு போகப் போகின்றார். இதனால் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. இது குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளதைக் காணலாம்.




Advertisement

Advertisement