• Jul 24 2025

நடன இயக்குநர் சாண்டி மாஸ்டரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?- வெளியாகிய தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சின்னத்திரையில் மானாட மயிலாட என்னும் நிகழ்ச்சி மூலம் தன்னுடைய கெரியரைத் தொடங்கியவர் தான் சாண்டி.இந்த நிகழ்ச்சியில் சூப்பராக ஆடியதைத் தொடர்ந்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கிங்ஸ் ஆஃப் டான்ஸ் சீசன் 2வில் நடுவராக மாறினார்.

பின் சின்னத்திரையில் நடன இயக்குநராக வலம் வந்த இவர் தண்ணில கண்டம், கெத்து, ரஜினியின் காலா போன்ற படங்களில் நடனம் அமைத்து வந்தார். தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு, கன்னடம் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.


பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு பெரிய வரவேற்பு பெற்றார்.தற்போது பிரேமம் பட புகழ் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் புதிய படம் நடித்து வருகிறார்.சாண்டி மாஸ்டர் ஒரு எபிசோடுக்கு நடனம் அமைக்க ரூ. 50 ஆயிரம் வரை சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது.


நடனம், நடிப்பு மற்றும் மாடலிங் என கலக்கிவரும் சாண்டி மாஸ்டர் பெரிதாக விலை உயர்ந்த காரோ, பைக்கோ வைத்திருக்கவில்லை, ஆனால் அவரது சொத்து மதிப்பு ரூ. 7 கோடி வரை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement