• Jul 24 2025

என் நண்பனைப் போல நெருக்கமாக ஒட்டி விட்டார்- அஜித் குறித்து நெகிழ்ந்த காஷ்மீர் இளைஞன்- வைரலாகி வரும் புகைப்படம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் அஜித் தற்பொழுது AK 61  என்னும் படத்தில் நடித்து வருகிறார். ஹெச் வினோத் இயக்கும் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிகை மஞ்சு வாரியார் நடித்து வருகின்றார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு, ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் செட் போட்டு படமாக்கப்பட்டு வருகிறது.

ஏகே 61 படத்தின் ஷூட்டிங்கில் அஜித் கலந்துகொள்வது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால், அஜித் இல்லாத காட்சிகளை இயக்குநர் ஹெச் வினோத் ஷூட் செய்துவருவதாக சொல்லப்படுகிறது.அத்தோடு அஜித் தனது நண்பர்களுடன் டூர் அடித்து வருகின்றார்.


அந்த வகையில் காஷ்மீரின் லடாக் பகுதிகளில் பைக் டைடிங் செய்துவந்த அஜித்துடன், நடிகை மஞ்சு வாரியரும் இணைந்தார். மேலும், கார்கில் போர் நினைவிடம் சென்ற அஜித், சல்யூடி அடித்து வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.


 தொடர்ந்து பயணித்த அஜித், காஷ்மீரைச் சேர்ந்த முதியவர், ஷமி என்ற இளைஞர் உட்பட சிறுவனுடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலானது.


அந்த வகையில் அஜித்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ஷமி என்ற இளைஞர், "நான் சந்தித்ததில் சிறந்த மனிதர் அஜித். பார்த்த சில நிமிடங்களிலேயே மனதுக்கு நெருக்கமான நண்பராக நம்முடன் ஒட்டி விடுகிறார்" எனத் தெரிவித்துள்ளார். 


தமிழகத்தையும் கடந்து காஷ்மீர் வரை அஜித்துக்கு ரசிகர்கள் இருப்பதையே இது காட்டியுள்ளது. மேலும், அஜித் எடுத்துக்கொண்ட போட்டோவும், ஷமியின் பாராட்டும் மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக இருப்பதாகவும் ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.


Advertisement

Advertisement