• Jul 23 2025

காமெடி நடிகர் மதன் பாபுவின் மகள் பிரபல பாடகியா..அடடே அவர் தான் இந்த பாடல்கள் எல்லாம் பாடினாரா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் செம ஹிட்டாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று நீயா நானா. பல வருடங்களாக எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல், TRP குறையாமல் ரசிகர்களின் பெரிய ஆதரவோடு ஒளிபரப்பாகிறது.

சில நேரங்களில் அதில் பேசப்படும் தலைப்பு மக்களிடம் நல்ல ரீச் ஆகும், சிலரின் பேச்சுகள் சமூக வலைதளங்களில் அதிகம் ஷேர் செய்யப்படும். அத்தோடு அப்படி சமீபத்தில் பாடகர்கள் இடம்பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது.


மேலும் அதில் இவர்களா இந்த ஹிட் பாடல்களை பாடியவர்கள் என்று ரசிகர்கள் ஆச்சரியப்படும் நமக்கு அறிமுகம் இல்லாத பாடகர்கள் இடம்பெற்றார்கள்.இந்த நிகழ்ச்சியில் ஜனனி என்ற பாடகி கலந்துகொண்டார்.

அவர் வீராப்பு திரைப்படத்தில் சுந்தர் சி யை பார்த்து கோபிகா பாடும் பாடலான, போனா வருவீரோ, ரோசு ரோசு ரோசு அழகான ரோசு நான் என்ற பாடலையும் நான் தான் பாடினேன் என கூற பின் அவர் காமெடி நடிகர் மதன் பாபுவின் மகள் என்று தெரிவிக்கிறார்.


எனினும் இதைக்கேட்டதும் தொகுப்பாளர் கோபிநாத் மதன் பாபு சாரின் மகளா நீங்கள் என ஆச்சரியமாக கேட்கிறார்.   

Advertisement

Advertisement