• Jul 25 2025

தனது 10வயது மகளுக்காக உயிர் வாழ்ந்த காமெடி நடிகர் சதீஷ் மரணம்.. பிரபல நடிகை கூறிய மனதை உருக்கும் சம்பவம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட் நடிகரும், இயக்குநரும், எழுத்தாளருமான சதீஷ் கௌஷிக் மாரடைப்பால் மரணம் அடைந்த செய்தியானது திரையுலகையே உருக்கி உள்ளது. அதாவது ஹோலி பண்டிகையை கொண்டாட டெல்லிக்கு சென்ற இடத்தில் அவர் உயிரிழந்தார். இதனையடுத்து பல பிரபலங்களும் அவர் குறித்த பல கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


அந்தவகையில் சதீஷ் கௌஷிக் பற்றி பிரபல நடிகையான சுஷ்மிதா முகர்ஜி கூறுகையில் "அண்மையில் நான் அவரை சந்தித்தபோது, நல்லா வாக்கிங் போகிறீர்கள், டயட்டிலும் இருக்கிறீர்களே என்றேன். அவர் மது அருந்த மாட்டார், அசைவம் சாப்பிட மாட்டார். கடுமையான உணவுக் கட்டுப்பாட்டில் சதீஷ் இருந்தார். தனது எடையை குறைத்தார், ரொம்ப சந்தோஷமாக இருந்தார்" என்றார்.


மேலும் "நீங்கள் இவ்வளவு வாக்கிங் போய் நான் பார்த்ததே இல்லை என்றேன். அதற்கு அவரோ, நான் முழுவதுமாக மாறிவிட்டேன். என் 10 வயது மகள் வன்ஷிகாவுக்காக வாழ விரும்புகிறேன் என்றார். அப்படி இருக்கும்போது சதீஷ் எப்படி இறந்தார் என தெரியவில்லை" எனவும் உருக்கமாக பேசியுள்ளார் சுஷ்மிதா.

அத்தோடு "என் கணவர் ராஜாவும், சதீஷும் ஒரு காலத்தில் ஒரே அறையில் தங்கியிருந்தார்கள். மேடை நாடகங்களில் நடித்த காலத்தில் இருந்தே சதீஷை எனக்கு நன்றாகத் தெரியும். அவர் எனக்கு 40 ஆண்டு கால பழக்கம். அவர் ஒரு சிறந்த காமெடியன், இயக்குநரும் கூட. மிகவும் திறமைசாலி. எப்பொழுதும் சிரித்துக் கொண்டே இருப்பார்" எனவும் சதீஷ் பற்றி பலவாறு சுஷ்மிதா முகர்ஜி கூறியுள்ளார்.

Advertisement

Advertisement