• Jul 25 2025

'நா ரெடி' பாடலால் வந்த சோதனை... விஜய்க்கு ஆதரவாக செயற்படுவதாகக் கூறி... தணிக்கை வாரிய தலைவர் மீது புகார்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் லியோ. இப்படத்தினுடைய பர்ஸ்ட் சிங்கிள் ஆன 'நா ரெடி' பாடலானது தளபதியின் பிறந்தநாள் ஸ்பெஷலாக கடந்த ஜூன் 22-ஆம் தேதி வெளியானது.

இப்பாடல் ஆனது வெளியான நாள் முதலே சிறந்த வரவேற்பை பெற்று வருவது மட்டுமில்லாமல் சில விமர்சனங்களையும் சந்தித்து வருகின்றது. அந்தவகையில் தற்போது லியோ பட பாடலுக்கு எதிராக சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டிருந்தது.


அதாவது போதைப்பொருள் பழக்கம், ரவுடிசத்தை ஊக்குவிக்கும் வகையில் லியோ பட ‘நான் ரெடி’ பாடல் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னை கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் செல்வம் ஆன்லைன் மூலமாக இந்தப் புகார் மனுவினை அளித்திருந்தார். ஆனால் இதுகுறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


இந்நிலையில் இவர் தற்போது திரைப்பட தணிக்கை வாரிய தலைவர் மீது காவல் துறையில் இணையத்தளம் மூலம் மீண்டும் புகார் அளித்துள்ளார். அதாவது லியோ திரைப்பட பாடல் வரிகள் வன்முறையைத் தூண்டுவதாக தான் அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், ஆகவே நடிகர் விஜய்க்கு ஆதரவாக செயற்படுவதாகவும் தணிக்கை வாரிய தலைவர் அப்புகாரில்  சமூக ஆர்வலர் செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement