• Jul 23 2025

முடிவுக்கு வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்- வெளியாகிய கிளைமாக்ஸ் ஷுட்டிங் போட்டோஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். தற்போதைய சூழ்நிலையில் கூட்டுக் குடும்ப முறை என்பது பலருக்கும் எட்டாத கனியாக இருக்கிறது. பலரும் அதை வெறுத்துக் கொண்டிருக்கின்றனர். 


ஆனாலும் இந்த சீரியலில் அண்ணன் தம்பி ஒற்றுமை மற்றும் கூட்டுக் குடும்பத்தில் சந்தோஷம் துக்கங்களை பற்றி விவரித்து கொண்டு இருக்கிறது.ஆரம்பத்தில் இந்த சீரியல் ஒவ்வொரு வீட்டிலும் நடப்பது போன்று கதை நகர்ந்து கொண்டிருந்த நிலையில் சமீபத்தில் தனத்திற்கு கேன்சர் வந்தது தான் பெரும் பின்னடைவை சந்தித்தது.


இதன் பின்னர் தனம் குணமடைந்து விட்டார்.அத்தோடு புதுவீட்டுக்கும் சென்று விட்டனர். கண்ணனிடமிருந்து பறிபோன பாங்க் வேலையும் திரும்ப கிடைத்து விட்டது. பிரசாந்தால் ஜெயிலுக்கு போன ஜீவாவும் கதிரும் திரும்ப வந்து விட்டனர். அத்தோடு குடும்பம் அனைத்தும் ஒன்றாக இணைந்து விட்டனர்.


இப்படியான நிலையில் இந்த சீரியலின் கிளைமாக்ஸ் சூட்டிங் இன்றைய தினம் நடைபெற்றுள்ளது. இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement