• Jul 26 2025

பிக்பாஸ் தாடி பாலாஜிக்கு குவியும் வாழ்த்துக்கள்..இது தான் விஷயமா.?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின்  முன்னணி காமெடி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்தவர் தாடி பாலாஜி.அத்தோடு கடந்த 1997 ஆம் ஆண்டு  திரைக்கு வந்த நந்தினி என்ற படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் தாடி பாலாஜி. அதன் பிறகு மாயா மச்சீந்திரா என்ற தொடரில் எம் எஸ் பாஸ்கர் உடன் இணைந்து காமெடி கதாபாத்திரங்களில் கலக்கியிருந்தார்.

நிலவே வா, வாலி, துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் கேட்டுப்பார், தமிழா, ஷாஜகான், பொன்னியின் செல்வன், சுறா, லிங்கா, கத்தி சண்டை, பட்லர் பாலு, சரவணன் இருக்க பயமேன், தவம், தீனா என்று பல படங்களில் நடித்துள்ளார். அத்தோடு பெரும்பாலும் விஜய் நடித்த படங்களில் தான் அதிகளவில் வலம் வந்துள்ளார். கலக்கப்போவது யார், சிரிப்புடா ஆகிய ரியாலிட்டி ஷோக்களிலும் தாடி பாலாஜி வலம் வந்துள்ளார்.


இவ்வளவு ஏன், கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2ஆவது சீசனில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். மேலும் இந்த நிகழ்ச்சியின் அவரது மனைவி நித்யாவும் பங்கேற்று இருந்தார்.  

அத்தோடு இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில்  மட்டும் நடுவராக கலந்து கொண்டு வருகிறார்.எனினும்  தற்போது கூட ஒளிபரப்பாகி வரும் கலக்கப் போவது யார் 4 சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக வருகின்றார்.

இவ்வாறுஇருக்கையில் தாடி பாலாஜி ஸ்வான்கி என்ற புதிய கார் ஒன்றை வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. ஆனால், அந்த கார் புகைப்படம் எதுவும் வெளியாகவில்லை. அவர் வாங்கிய பிஎம்டபிள்யூ கார் உடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement