• Jul 26 2025

பிரமாண்டமாக நடந்த கவுதம் கார்த்திக்- மஞ்சிமா மோகன் திருமணம்.. வெளியானது புகைப்படம்... குவியும் வாழ்த்துக்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கதாநாயகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் கவுதம் கார்த்திக். பிரபல நடிகர் கார்த்திக்கின் மகனான இவர் 'கடல்' படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி தொடர்ந்து 'இவன் தந்திரன், ரங்கூன், மிஸ்டர் சந்திரமவுலி' உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். 


இவரும் நடிகை மஞ்சிமா மோகனும் ஒருவரையொருவர் காதலிப்பதாக ஏற்கெனவே தகவல் வெளியாகி இருந்தது. மஞ்சிமா மோகன் 'அச்சம் என்பது மடமையடா, துக்ளக் தர்பார், எப்.ஐ.ஆர்' உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்து இருக்கிறார். 

மேலும் கவுதம் கார்த்திக்கும், மஞ்சிமா மோகனும் "தேவராட்டம்" என்ற படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது இவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. இக்காதலை சமூக வலைத்தளத்தில் இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்தனர். 


அதுமட்டுமல்லாது கவுதம் கார்த்திக்-மஞ்சிமா மோகன் திருமணம் சென்னையில் வருகிற 28-ஆம் தேதி நடக்க உள்ளது என ஏற்கெனவே அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் இவர்களின் திருமணம் தற்போது நடந்து முடிந்துள்ளது. இது குறித்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதற்குப் பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து உள்ளனர்.




Advertisement

Advertisement