• Jul 24 2025

நக்ஷ்சத்திராவைத் தொடர்ந்து குட் நியூஸ் சொன்ன கண்மணி மற்றும் நடிகர் நவீன் தம்பதியினர்- குவியும் வாழ்த்துக்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!


காவிரி, மாலை முரசு, ஜெயா டிவி ஆகிய தொலைக்காட்சிகளிலும் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் தான் கண்டனி. கடந்தாண்டு ஜூன் மாதம் இவர் நடிகர் நவீனை திருமணம் செய்து கொண்டார்.

கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பான ‘இதயத்தை திருடாதே’ தொடரில் சிவா எனும் கதாபாத்திரத்தில் நவீன் நடித்திருந்தார் . இது தவிர கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பாகிய நவீன் கண்ட நாள் முதல் சீரியலிலிலும் நடித்திருந்தார்.


இந்நிலையில் கண்மணி சேகர் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தம்பதியர் அறிவித்துள்ளனர்.இது தொடர்பாக வீடியோ ஒன்றை தம்பதியர் வெளியிட்டுள்ளனர். அதில், "நாங்கள் இதை சர்ப்ரைஸ் ஆக வைத்திருக்க வேண்டும்  என்று  நினைத்திருந்தோம்... சலூனில் எடுத்த வீடியோவை பதிவிடும் போது நாங்க இதை கொஞ்சமும் கவனிக்கல. மண்டையில் உள்ள கொண்டைய மறந்தது போல ஆகிவிட்டது.

 அதனால், பலரும் எங்ககிட்ட கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. அதனால் தான் சரி நம்ம ஃபேமிலிகிட்ட இதை சொல்லிடலாம் என்று முடிவு பண்ணிட்டோம். கடவுள் கொடுக்குறாங்க.. அதை நாம அப்படியே ஏத்துக்கணும்!' எனப் பேசியுள்ளனர். ரசிகர்கள் பலர் தம்பதியருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்



Advertisement

Advertisement