• Jul 25 2025

திருமண பந்தத்தில் இணைந்த தவமாய் தவமிருந்து சீரியல் நடிகர் பிரிட்டோ மற்றும் சந்தியா- குவியும் வாழ்த்துக்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!


சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளிடையே காதல் ஏற்பட்டு அவர்கள் திருமணம் செய்துகொள்வது சமீப காலமாக அதிகரித்த வண்ணம் உள்ளது. ஏற்கனவே சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த செந்தில் - ஸ்ரீஜா, ராஜா ராணி சீசன் 1-ல் நடித்த சஞ்சீவ் - ஆல்யா மானசா, திருமணம் சீரியலில் நடித்த சித்து - ஸ்ரேயா என இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.

அந்த வரிசையில் தற்போது புதிதாக இணைந்திருப்பவர்கள் பிரிட்டோ - சந்தியா ராமச்சந்திரன் ஜோடி. இவர்கள் இருவரும் தவமாய் தவமிருந்து என்கிற சீரியலில் ஜோடியாக நடித்து வந்தனர். அதில் பிரிட்டோ பாண்டியாகவும், சந்தியா மலர் என்கிற கதாபாத்திரத்திலும் நடித்து வந்தனர். 


அந்த சீரியலில் இவர்களது கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அவுட் ஆகி இருந்ததால், ரசிகர்கள் மத்தியில் இருவரும் பாப்புலர் ஆகினர்.அந்த சீரியலில் நடித்த போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு, தற்போது இருவரும் குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் நடந்துள்ளது.

இவர்களின் திருமணத்தில் சீரியல் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.அத்தோடு ரசிகர்களும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement