• Jul 25 2025

கின்னஸ் சாதனை படைத்த 'எதிர்நீச்சல்' சீரியல் நடிகை... குவியும் வாழ்த்துக்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று 'எதிர்நீச்சல்'. டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் இந்த சீரியலானது தொடர்ந்து முன்னணி வகித்து வருகின்றதது. அந்த அளவிற்கு மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளது. 


அந்தவகையில் இந்த சீரியலில் ஆதிரைக்கு சமீபத்தில் கரிகாலனுடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. அதாவது ஆதிரை காதலித்த அருணை விடுத்து கரிகாலனுக்கு திருமணம் செய்து வைத்த இயக்குநரின் இந்த முடிவு ரசிகர்களுக்கு கொஞ்சம் வெறுப்பை ஏற்படுத்தி இருந்தாலும் பலரின் மனம் கவர்ந்த சீரியலாக இன்றுவரை எதிர்நீச்சல் உள்ளது.


இந்த சீரியலில் ஆதி குணசேகரன் மற்றும் ஈஸ்வரி தம்பதியின் மகளாக தர்ஷினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை மோனிஷா. இதில் இவருக்கு ஆங்காங்கே ஒரு சில காட்சிகள் தான் அமைந்திருக்கின்றன. 

இந்நிலையில் நடிகை மோனிஷா மற்றும் அவரது சகோதரி இருவருமே ஒரு கின்னஸ் ரெக்கார்ட் ஹோல்டர் என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. அதாவது இவர்கள் இருவரும் சிலம்பத்தில் சாதனை செய்திருக்கிறார்கள்.


இதனையடுத்து விளையாட்டு வீராங்கனையாக சென்று இன்டர்நேஷனல் அளவில் சிலம்பத்தில் கோல்ட் மெடல் பெற்றிருக்கிறார்கள். அத்தோடு கராத்தே போன்ற பல தற்காப்பு கலைகளையும் இவர்கள் தெரிந்து வைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் இவர் ஒரு கின்னஸ் சாதனையாளர் என்பது பலருக்கும் இப்போது தான் தெரிந்திருக்கின்றது. நடிகை மோனிஷாவின் திறமையைப் பாராட்டிப் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement