• Jul 26 2025

முக்கிய பட்டியலில் இடம்பெற்ற முதல் இந்திய நடிகை.. குவியும் வாழ்த்துக்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பான் இந்திய நடிகையாக வலம் வருகின்ற ஆலியா பட் தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டுமின்றி திரை வாழ்க்கையிலும் பல சாதனைகளைப் படைத்த ஒரு பெண் மணியாகத் திகழ்ந்து வருகின்றார். அந்தவகையில் இவர் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு சர்வதேச அளவில் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுவரும் 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படத்தின் மூலம் உலகெங்கிலும் உள்ள பல கோடி மக்களின் மனங்களில் இடம்பிடித்திருக்கின்றார்.


இவ்வாறாக இந்திய சினிமாவில் பலராலும் விரும்பப்படும் ஒரு நடிகையாக இருக்கும் ஆலியா பட் தற்போது வெரைட்டியின் 'Impactful International women 2023' என்ற பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றார். பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்களின் பட்டியலில் எம்மா தாம்சன், ரோசாலியாவுடன் ஆலியாவின் பெயரும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மேலும் இந்தப் பட்டியலில் ஆலியா பட் இடம்பெற முக்கியமான காரணம் 2022-ஆம் ஆண்டில் 'கங்குபாய் கத்தியவாடி,  'பிரம்மஸ்த்ரா: பார்ட் ஒன் - ஷிவா, ஆர்.ஆர்.ஆர்' என அடுத்தடுத்த பல வெற்றிப்படங்களைக் கொடுத்தமை தான். இவ்வாறாக பாக்ஸ் ஆபிஸில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி தனது திடமான நடிப்பால் சர்வதேச அளவில் தற்போது அங்கீகாரம் பெற்றுள்ளார். 


அதுமட்டுமல்லாது இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய நடிகை ஆலியா பட் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். இவருக்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் உட்படப் பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement