• Jul 23 2025

சிவ கார்த்திகேயனின் மார்க்கெட்டை உடைக்க நடக்கும் சதி! மைக் மோகனுக்கும் இதே நிலைதான் ஏற்பட்டது!

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

சிவ கார்த்திகேயன் சேர்த்து வைத்த மொத்த  பெயரும் டேமேஜ் ஆகும் விதமாக சம்பவம் ஒன்று நடந்தேறி உள்ளது. இசையமைப்பாளர் இமான் சிவகார்த்திகேயனுடன் இனி பம் பண்ண மாட்டேன் , அவர் எனக்கு துரோகம் செய்துவிட்டார் என்ற அதிர்ச்சி தகவலை கூறியிருந்தார்.பல பிரபலங்களும், சினிமா விமர்சகரும்  சிவகார்த்திகேயன் மீது தவறு இருப்பதாக சுட்டிக்காட்டியிருந்தனர். ஆனால் அவரது ரசிகர்கள் இப்பொழுதுமே சிவகார்த்திகேயன் பக்கம் தான் இருக்கிறார்கள். அதுவும் அவரின் மார்க்கெட்டை உடைக்க தான் இவ்வாறு சூழ்ச்சி நடந்து வருவதாக கூறுகின்றனர்.


சின்னத்திரையில் இருந்து தனது கடின உழைப்பால் தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களின் பட்டியலில் முக்கிய இடத்தில் இருக்கிறார். அதுவும் அவரது டாக்டர், டான்  போன்ற படங்கள் 100கோடியை தாண்டி வசூல் செய்தது. அத்தோடு கிடப்பில் போடப்பட்ட சிவகார்த்திகேயனின் அயலான் படம் வெளிவர இருக்கின்றது. இவ்வாறு ஒரு வளர்ச்சி பாதையைநோக்கி சிகார்த்திகேயன் சென்று காெண்டிருக்கின்றார்.


இதேபோல் சம்பவம் நடிகர் மைக் மோகனுக்கும் நடந்திருக்கின்றது. அவரின் படங்கள் ரஜனி கமலை விட அதிக நாள் ஓடி வசூல் படைத்தது. இந்நிலையில் அவருக்கு எயிட்ஸ் நோய் இருப்பதாக தயாரிப்பாளர் ஒருவர் பேட்டி கொடுத்தார். இதனால் மைக் மோகனின் மார்க்கட் காலி செய்யப்பட்டது. இதனால் சினிமாவை விட்டு விலத்திய மோகன் மீண்டும் கம்பேக் கொடுத்திருக்கின்றார். அதே போலவே சிவகார்த்திகேயன்  மார்க்கெட்டை உடைக்க சதி நடந்திருக்கின்றது.

Advertisement

Advertisement