• Jul 24 2025

தொடரும் உயிரிழப்புக்கள்... மற்றுமோர் பிரபலம் மரணம்... சோகத்தில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

புகழ்பெற்ற நாடக நடிகராகவும், பிரபல இயக்குநராகவும் திகழ்ந்து வந்தவர் அமீர் ராசா ஹுசைன். அதாவது தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முன்பே மேடை நாடகங்களின் மூலம் பல காவியங்களை மக்களிடம் கொண்டு சேர்ந்தவர் தான் அமீர் ராசா ஹுசைன்.


அந்தவகையில் இராமாயணம் என்ற பிரம்மாண்ட காவியத்தை கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்னரே மேடை நாடகத்தின் மூலம் மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளார். இந்த நாடகத்தின் கடைசி நிகழ்ச்சி முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் முன்னிலையில் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் அரசியலிலும் சில காலம் பணியாற்றினார். 


இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அமீர் ராசா ஹுசைன் காலமாகி உள்ளார். இவரின் இறப்பானது நாடகத்துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பாக பலராலும் பார்க்கப்பட்டு வருகின்றது.

Advertisement

Advertisement