• Jul 25 2025

நடுரோட்டில் தனக்குத் தானே முட்டையடித்து விளையாடிய சர்ச்சை நடிகை-இது தான் வேலையாம்மா உனக்கு- விளாசி வரும் நெட்டிசன்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவூட்டில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் ராக்கி சாவந்த். சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பேமஸ் ஆன ராக்கி சாவந்துக்கு பெரும்பாலும் கவர்ச்சி வேடங்கள் தான் சினிமாவில் கிடைத்தன. 

இவர் தமிழில் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த கம்பீரம் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார்.நடிகை ராக்கி சாவந்த் பாலிவுட்டில் சிக்காத சர்ச்சைகளே இல்லை என கூறலாம். குறிப்பாக கடந்த 2008ம் ஆண்டு தனக்கான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க சுயம் வரம் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி பரபரப்பை கிளப்பினார் ராக்கி.


 பின்னர் அந்நிகழ்ச்சியின் மூலம் வெளிநாட்டை சேர்ந்த ரித்தேஷ் என்கிற தொழிலதிபரை தேர்ந்தெடுத்து அவரை திருமணமும் செய்துகொண்டார் ராக்கி சாவந்த். சில ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து செய்து பிரிந்தனர்.இதையடுத்து ஆதில் கான் என்பவரை திருமணம் செய்துகொண்டார் . 

திருமணமான ஒரே மாதத்தில் ஆதில் கான் தன்னை அடித்து துன்புறுத்துவதாக பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்ததோடு அவரை விட்டும் பிரிந்தார். எப்போதும் சர்ச்சைக்குரியவராக இருக்கும் இவர் நடுரோட்டில் தனக்குத் தானே முட்டை அடித்து விளையாடியுள்ளார். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement