• Jul 26 2025

பெரியார் சிலை குறித்து சர்ச்சை கருத்து..அதிரடியாகக் கைது செய்யப்பட்ட பிரபல நடிகர்

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களிலும் வில்லன் கதாப்பாத்திரங்களிலும் நடித்து பிரபல்யமானவர் தான் கனல் கண்ணன். இவர் சண்டைப் பயிற்சிக் கலைஞராகவும் இருந்து வருகின்றார். 

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் இவர்  பெரியார் குறித்து பேசியது சர்ச்சையை கிளப்பியது. அதில், உலகப் புகழ் பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் முன்பு இருக்கும் கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை என்றைக்கு உடைக்கப்படுகிறதோ அன்றுதான் ஹிந்துக்களின் உண்மையான எழுச்சி நாள் என்று கண்ணன் பேசியிருந்தார்.


இவரின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்புகளும் ஆதரவுகளும் தெரிவித்து வந்தனர். இதையடுத்து பெரியார் சிலை குறித்து அவதூறு கருத்து தெரிவித்த புகாரில் சண்டை பயிற்சி கலைஞர் கனல் கண்ணனை பாண்டிச்சேரியில் வைத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

பின்னர் இவருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி 4 வாரங்களுக்கு காலை, மாலையில் இருவேளை விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், கனல் கண்ணன் மீது மூன்று மாதத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Advertisement

Advertisement