• Jul 25 2025

தீபிகா படுகோனின் காவி உடையால் சர்ச்சை: பிரபல தமிழ் நடிகர் பரபரப்பு கருத்து.!

lathushan / 2 years ago

Advertisement

Listen News!

தீபிகா படுகோண் ஒரு இந்திய திரைப்பட ந‌டிகை மற்றும் விளம்பர அழகியும் ஆவார். மேலும் இவர் கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் ந‌டித்திருக்கிறார்.


மேலும் இவர் டென்மார்க்கின் தலைநகர‌மான‌ கோப்பென்ஹாகெனில் உஜ்ஜ‌லா மற்றும் பிர‌காஷ் படுகோணெவுக்கு பிறந்தார்.

அ‌வ‌ரின் த‌ந்தையான‌ பிர‌காஷ் படுகோணெ ஒரு புகழ்பெற்ற பூப்பந்தாட்ட ஆட்டக்கார‌ர். மேலும் இவர் 2006 இல், படுக்கோன் தன் சினிமா அரங்கேற்றத்தை ஐஸ்வர்யா என்ற கன்னடப் படத்தில் நடிகர் உபெந்திராவுக்கு சோடியாக நடித்தார். 


இந்நிலையில் ஷாருக்கானின் 'பதான்' படத்திலிருந்து வெளியான பாடல் கடும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. ஒரு பக்கம் இந்தப்படத்தை தடை செய்ய வேண்டும் என ஷாருக்கான், தீபிகா படுகோனே உருவ பொம்மைகளை எரித்து வருகின்றனர்.


இந்நிலையில் தீபிகா படுகோனேவுக்கு ஆதரவாக முதன்முறையாக தமிழ் நடிகர் ஒருவர் குரல் கொடுத்துள்ளார்.  'பதான்' படத்திற்கு எதிராக கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பாடலின் காட்சியில் காவி நிறத்திலான கவர்ச்சி உடையில் தீபிகா படுகோன் காட்சிகளை நீக்காவிட்டால் படத்தை திரையிட அனுமதி மறுக்கப்படும் என மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் இந்த பிரச்சனையில் 'பதான்' படக்குழுவினருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த சர்ச்சை தொடர்பாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அதில் ’காவி உடை அணிந்தவர்கள் சிறுமிகளை கற்பழிக்கிறார்கள், எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகிறார்கள், வெறுப்பு பேச்சு பேசுகிறார்கள்.


ஆனால் காவி உடை அணிந்து திரைப்படத்தில் மட்டும் நடிக்க கூடாதா? என்று காரசாரமாக கேள்வி எழுப்பிவுள்ளார். அவரது இந்த பதிவுக்கு கீழ் ஏராளமானவர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement