• Jul 25 2025

விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட குக் வித் கோமாளி புகழ்! நடந்த பின்னணி என்ன?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி 4ம் சீசனில் புகழ் வாரம்தோறும் விதவிதமாக கெட்டப் போட்டு வருகிறார். கடந்த சீசனில் புகழ் பங்கேற்காத நிலையில் இந்த வருடம் ரசிகர்களை கவர பல்வேறு விதமாக கெட்டப் போட்டு வருகிறார் அவர்.

இந்த வார எபிசோடில் அவர் தளபதி விஜய்யின் கில்லி பட கெட்டப்பில் தான் வந்திருந்தார் புகழ். வழக்கம்போல புகழை CWC செட்டில் இருந்த மற்றவர்கள் அடித்து உதைத்துவிட்டனர். 

குறிப்பாக நடிகை ஸ்ருஷ்டி மற்றும் நடுவர் வெங்கடேஷ் பட் ஆகியோர் புகழை புரட்டி எடுத்துவிட்டனர்.இந்நிலையில் புகழ் விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார். "அனைத்து தளபதி ரசிகர்கள் சார்பாக மன்னிப்பு கேட்கிறேன்.. 🤪🙏🏻யாரும் தவறாக நினைக்க வேண்டாம்... அனைத்தும் கற்பனையே" என புகழ் குறிப்பிட்டு இருக்கிறார்.

"பண்றது எல்லாம் பண்ணிட்டு இப்படி ஒன்னு சொல்லிடு" என நடிகர் மகேந்திரன் அவரை விமர்சித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement