• Jul 24 2025

வீட்டுக்கு எப்போ வருவேன் என்று தெரியவில்லை... எப்போவும் உங்க நினைப்பாவே இருக்கு... குடும்பத்தை நினைத்து கண்ணீர் விடும் கூல் சுரேஷ்

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகி ரொம்பவும் விறுவிறுப்பா போய்க்கொண்டு இருக்கு அந்த வகையில் போட்டியாளர்களின் போட்டி தன்மையும் இப்போதுதான் சூடு புடிச்சி இருக்கு. பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட கூல் சுரேஷ் அவர்கள் தனது குடும்பத்தினருக்கு ஒரு தகவலை கவலையுடன் கூறியுள்ளார். 


கூல் சுரேஷ் அவர்கள் காலையில் எடுத்தவுடன் கேமராவை பார்த்து தனது குடும்பத்தினருக்கு வணக்கம் சொல்லி விட்டு இப்போ என்ன நேரம் என்று தெரியவில்லை. உங்களுக்கு ஸ்கூல் லீவ் என்று நினைக்கிறேன். ஸ்கூலுக்கு கவனமாக போயிட்டு கவனமா வாங்க. அப்பாவை எந்தநாளும் டிவியில் பார்க்குறீங்களா இல்லனா தூங்கிறீங்களா? தூக்கம் வந்தால் தூங்குங்க காலையில் ஸ்கூல் போக எழும்ப வேண்டும் தானே என்று  தனது பிள்ளைகளுக்கு அறிவுரை கூறுகிறார். 


மேலும் நேற்று நடந்த பெசன்ஸ் ஷோ டாஸ்கில் தனக்கு காசோலை கிடைத்ததை எடுத்து காட்டி பத்தாயிரம் ரூபா கிப்ட் ப்ரைஸ் கிடைத்துள்ளது. வீட்டில் எல்லோருக்கும் டிரஸ் வாங்கலாம். இதை நான் கொடுத்து விடவா அல்லது வரும் போது எடுத்துக்கொண்டு வரவா என்று கேட்ட கூல் சுரேஷ் கண்கள் கலங்கி நான் எப்போது வருவேன் என்று தெரியவில்லை நான் வரும் போது கொண்டு வருகிறேன்.

அப்பாக்கு வீட்டு நினைவாகவே இருக்கிறது. இங்கே சந்தோசமாக இருக்கிறேன் என்று  நினைப்பிங்க ஆனா ஒவ்வொரு நாளும் எனக்கு உங்களது நினைவாகத்தான் இருக்கு என்று மனமுருக பேசி இருக்கிறார்.  

Advertisement

Advertisement