• Jul 24 2025

பொன்னியின் செல்வன் படத்தை பார்க்க முண்டா பனியன் அணிந்துகொண்டு குதிரையில் வந்து இறங்கிய கூல் சுரேஷ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. முதல் பாகம் போலவே இந்த பாகமும் நிச்சயம் மெகா ஹிட்டாகும் என்ற நம்பிக்கையில் படக்குழுவினரும், ரசிகர்களும் இருந்தனர். அந்த எதிர்பார்ப்போடு இன்று படமானது திரையரங்குகளில் வெளியானது.

முதல் பாக முடிவில் அருண்மொழி வர்மன் கடலுக்குள் விழுவது போலவும், அவரை காப்பாற்ற ஊமைராணி நீருக்குள் குதிப்பதுபோலவும் படத்தை முடித்திருந்தார் மணிரத்னம். இரண்டாம் பாகம் அதிலிருந்து தொடங்குகிறது. நள்ளிரவு காட்சிகள் ரத்து செய்யப்பட்டதையடுத்து முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு படையெடுத்தனர்.


இந்நிலையில் சென்னை காசி தியேட்டரில் நடிகர் கூல் சுரேஷ் படம் பார்ப்பதற்காக வந்தார். எல்லா படங்களுக்கு வித்தியாசமான முறையில் வருகை தரும் கூல் சுரேஷ் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் பார்ப்பதற்கு முண்டா பனியன் அணிந்துகொண்டு குதிரையில் வந்து இறங்கினார்.


மேலும், வெந்து தணிந்தது காடு பொன்னியின் செல்வன் 2வுக்கு வணக்கத்த போடு என அவரது ட்ரேட் மார்க் வசனத்தையும் உச்சரித்தார். இதனைக் கண்ட ரசிகர்கள் ஆராவாராம் செய்து ஆச்சரியப்பட்டனர். அவர் குதிரையில் வந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.


முன்னதாக முதல் பாகத்தில் இருந்த சில குறைகள் இரண்டாம் பாகத்தில் இருக்காது என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே அதிகம் இருந்தது. பொன்னியின் செல்வன் 2வை பார்த்த ரசிகர்களில் பலர் படம் தங்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துவிட்டதாக கூறுகின்றனர். அதேசமயம் ஒரு தரப்பினர் இரண்டாம் பாகத்துக்கு முதல் பாகமே பரவாயில்லை; பொன்னியின் செல்வன் நாவலையே படத்தில் மணிரத்னம் மாற்றி வைத்திருக்கிறார் என்றும் கருத்து தெரிவிக்கின்றனர்.


படத்தில் விக்ரமின் நடிப்பு அட்டகாசமாக இருப்பதாகவும், ஐஸ்வர்யா ராய் - விக்ரம் இடையேயான போர்ஷனை மணிரத்னம் மிக நுட்பமாக கையாண்டிருக்கிறார் எனவும் ரசிகர்கள் கூறுகின்றனர். அதேபோல், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை முதல் பாகத்தைவிடவும் இரண்டாம் பாகத்தில் அட்டகாசமாக இருக்கிறது என்றும் சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸை பார்க்க முடிகிறது.


Advertisement

Advertisement