• Jul 24 2025

கண்ணை நம்பாதே படத்தைப் பார்க்க செங்கல்லுடன் வந்த கூல் சுரேஷ்- காரணம் என்ன தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த இயக்குநர் மு. மாறன் இயக்கத்தில்நடிகர் உதயநிதி நடிப்பில் இன்றைய தினம் வெளியாகிய திரைப்படம் தான் கண்ணை நம்பாதே. இப்படத்தில், ஆத்மிகா, பூமிகா சாவ்லா, பிரசன்னா, சதீஷ், சுபிக்ஷா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் பேனரில் வெளியாகி உள்ள இந்த படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார். ஸ்ரீதர் கூடுதல் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார்.


இப்படம் ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இப்படத்தினைப் பார்த்த கூல் சுரேஷ் தற்பொழுது மீடியாவை சந்தித்து பேசியுள்ளார்.. மேலும் இவர் படம் பார்க்க செங்கல்லுடன் வந்திருந்தார்.


எனவே தொடர்ந்து பேசிய அவர் உதயநிதி சேர் நீங்க சூப்பரா நடிச்சிருக்கிறீங்க. நான் படம் பார்க்க செங்கல்லுடன் வந்திருக்கிறேன்.கொஞ்சநேரம் செங்கல் வைத்திருக்கும் போதே எனக்கு கை வலிக்குது.நீங்க இதை வச்சுக் கொண்டு எப்பிடித்தான் பிரச்சாரம் பண்ணினீங்களோ என்று தெரியல. உங்களுக்கு மனப்பலம் அதிகம் என்று பாராட்டினார். தொடர்ந்து பேசிய அவர் இயக்குநர் மு. மாறன் அவர்களையும் பாராட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement