• Jul 24 2025

பெங்களூரில் தலைமறைவாக இருக்கும் மீரா மிதுனுக்கு அதிரடியாக பிடி வாரண்ட் போட்ட நீதிமன்றம்-

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை மீரா மிதுன்  தலைமறைவாக இருப்பதாகவும் விரைவில் கைது செய்யப்படுவார் என்று கூறப்படுகின்றது.

மாடல் அழிகியான மீரா மிதுன் சில படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராக பங்கு பற்றியதை அடுத்தே மிகவும் பிரபல்யமானார்.இது தவிர சர்ச்சைக்குரிய வீடியோக்களையும் பதிவிட்டு பல கண்டனங்களுக்குள்ளாகியும் வருகின்றார்.


அந்த வகையில் இவர் பட்டியலினத்தவர் குறித்து அவதூறாகப் பேசியதால் இவருக்கு எதிராக வழக்கு பதியப்பட்டது.வழக்கில் ஆஜராகாமல் இருந்து வந்த அவர், தலைமறைவு ஆகிவிட்டதாக போலீஸார் தெரிவித்து இருந்தனர்

இந்நிலையில் இந்த வழக்கு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன் விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை தரப்பில், நீதிமன்ற உத்தரவின்படி மீராமிதுனை வேளச்சேரி மற்றும் சேத்துப்பட்டில் தேடியும் கிடைக்கவில்லை எனவும், அவர் பெங்களூருவில் இருப்பதாக தெரிய வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.


தலைமறைவாக உள்ள நடிகை மீரா மிதுன் பெங்களூரில் இருப்பதாகவும், அவரை விரைந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாகவும் காவல் துறை தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, வழக்கின் விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளார்.

 உடனடியாக பெங்களூருக்கு விரைந்து மீரா மிதுனை போலீஸார் கைது செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தனது ஆண் நண்பருடன் கேரளாவில் ஒளிந்திருந்த மீரா மிதுனை போலீஸார் கைது செய்ததும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement