• Jul 25 2025

நடிகை அதியா செட்டியை கரம் பிடிக்கும் கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல்! - அடடே திருமணம் எப்போது தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

இந்திய கிரிக்கெட் அணியின் ஆரம்ப ஆட்டக்காரராக இருந்து வருபவர் தான் கே.எல்.ராகுல். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இவர், பல்வேறு காதல் வதந்திகளில் சிக்கிய பிரபலமான கிரிக்கெட் வீரர் எனலாம்.

 கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், நடிகை நிதி அகர்வாலுடன் டேட்டிங் செய்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், சமீப காலமாக பிரபல பாலிவூட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகளான அதியா ஷெட்டியை காதலித்து வருவதாக தகவல் வெளியானது.


 நடிகை அதியா ஷெட்டியும், கே.எல்.ராகுலும் மிகவும் நெருக்கமாக பழகி வந்தார். மேலும் கே.எல்.ராகுலின் வெளிநாட்டு சுற்றுலா பயணங்களின் போது, அவருடன் செல்வதையும் வழக்கமாக வைத்திருந்தார் அதியா ஷெட்டி.

இவர்கள் இருவரும் மும்பை பாந்த்ராவில், கடற்கரையை ஒட்டி கட்டப்பட்டுள்ள ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில், லிவிங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது இந்த காதல் ஜோடி, இரு குடும்பத்தின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.


அதன்படி இவர்களுடன் திருமணம், ஜனவரி மாதம் 21 முதல் 23 ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளதாகவும்.  இவர்களுடைய திருமணம் பாரம்பரிய வழக்கப்படி, ஹல்தி, மெஹந்தி, சங்கீத் போன்ற நிகழ்வுகளுடன் ஆரம்பமாக உள்ளது. இதுகுறித்து இருதரப்பு குடும்பத்தினர் மத்தியில் இருந்தும் அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement