• Jul 25 2025

நாய்களுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய கிரிக்கெட் வீரர் தோனி.. தீயாய் வைரலாகி வரும் வீடியோ..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல கிரிக்கெட் வீரர் தோனி தற்போது சினிமா படத் தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். தோனி என்டர்டெயின்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ளார்.

இதையடுத்து தற்போது தமிழில் தனது முதல் படத் தயாரிப்பை துவங்கியுள்ளார் தோனி. LGM என்ற படத்தை அவர் தயாரித்துவரும் சூழலில் படத்தில் ஹரீஷ் கல்யாண் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இதனிடையே நேற்றைய தினம் தோனி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளார். அவருக்கு பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை பகிர்ந்திருந்தனர். அவரது பிறந்தநாள் கொண்டாட்டம் பிரபலங்களுடன் சிறப்பாக கொண்டாடப்படும என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு விருந்தினர்களாக தோனி தேர்ந்தெடுத்தவர்கள் யார் தெரியுமா?

தன்னுடைய அழகான தோட்டத்தில் தன்வீட்டு நாய்க் குட்டிகளுடன் இணைந்து பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார் தோனி. தானே கேக்கின் மெழுகுவர்த்தியை ஏற்றி, தானே தனியாக ஊதி, பின்பு, நாய்களுடன் இணைந்து அதை சாப்பிட்டார் தோனி, அவரது மனைவி சாக்ஷி உள்ளிட்டவர்கள் யாரும் இல்லாமல் நாய்களுடன் மட்டுமே இந்தக் கொண்டாட்டம் காணப்பட்டது. மேலும் தனக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றியும் கூறியுள்ளார்.


Advertisement

Advertisement