• Jul 25 2025

தாத்தாவால் ஷாக்கான கூட்டம்... கோபிநாத்தால் விழுந்து விழுந்து சிரித்த அரங்கம்... 'நீயா நானா' ப்ரோமோ வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் முக்கிய விவாத நிகழ்ச்சியான 'நீயா நானா' ஷோ ஆனது கடந்த 10 ஆண்டுகளாக ரசிகர்களை  பல விதத்திலும் கவர்ந்து வருகிறது. ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான தலைப்புகளில் இந்த ஷோவை தொகுப்பாளர் கோபிநாத் நடத்தி வருகிறார். 

இந்நிலையில் இந்த வாரமும் சுவாரஸ்யமான தலைப்பின் கீழ் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு ட்ரெண்டிங் தாத்தா, பாட்டிகள் மற்றும் இளைஞர்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்படுகின்றது.


குறிப்பாக இதில் தற்போது இருக்கும் தாத்தா பாட்டிகள் ட்ரெண்டாக உள்ளனர் எனவும் அவர்களின் உடை, அலங்காரம் அனைத்தும் இளைஞர்களை ஓவர்டேக் செய்யும் அளவிலேயே இருக்கின்றது எனவும் கலந்துரையாடல் இடம்பெறுகின்றது.

அதில் ஒரு தாத்தா "வெளிய போய்ட்டேன் என்றால் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 30, 40 செல்பி எடுத்து விடுவேன்" எனக் கூறுகின்றார். இதனைக் கேட்டதும் ரசிகர்கள் ஷாக் ஆகி விட்டனர்.


அத்தோடு மற்றுமோர் ப்ரோமோ வீடியோவில் ஒருவர தான் இந்த மாதிரி பங்ஷனுக்குப் போகும்போது நைல் போலிஷ், மேக்கப் போட்டுக்கொள்வதாக கூறுகின்றார். அதற்கு கோபிநாத் "இது ஒரு பங்க்ஷனா" எனக்கேட்கின்றார். அதைக்கேட்டதும் அரங்கமே விழுந்து விழுந்து சிரிக்கின்றது.  


அதுமட்டுமல்லாமல் இந்த ஷோவில் தாத்தா ஒருவர் எழுந்து நின்று ஆடி அரங்கத்தையே மகிழ்ச்சியடைய வைத்துள்ளார். 


Advertisement

Advertisement