• Jul 26 2025

நீச்சல் குளத்தில் கொஞ்சி விளையாடிக் கும்மாளம் போடும் குயின்சி மற்றும் கதிரவன்- கியூட்டான வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 ஆனது ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றது.போட்டியாளர்களும் ஒருவருக்கொருவர் சலித்தவர்கள் இல்லை என்பதை ஒவ்வொரு டாஸ்கிலும் காட்டி வருகின்றனர்.

குறிப்பாக வீட்டுக்குள் நுழைந்த நாளிலிருந்து அசீம் தனலக்ஷ்மி மகாலக்ஷ்மி விக்ரமன் ஆகியோர் தமது குரலை உயர்த்திப் பேசி வருவதோடு அடிக்கடி மோதலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தற்பொழுது ஏடிகே அமுதவாணன் ஆகியோரும் கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பித்து விட்டனர். இதனால் அடிக்கடி மோதல்களும் ஏற்பட்டு வருகின்றன.ஒவ்வொருவரும் தமது விளையாட்டு யுக்தியைப் பயன்படுத்தி விளையாடி வருகின்றனர்.


இது ஒரு புறம் கடந்த ஒரு நாளில் நீச்சல் குளத்தில் எல்லோரும் குளித்துக் கொண்டு இருக்கும் போது கதிரவன் மற்றும் குயின்சி இருவரும் தண்ணீரை ஒருவருக்கொருவர் மாற்றி தெளித்து விளையாடியிருக்கின்றனர்.இது குறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement