• Jul 25 2025

லாரன்ஸ் படத்தில் ஆடியதற்கு சம்பளம் தரல.. டான்சர்கள் போலீஸ் நிலையத்தில் புகார்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

ராகவா லாரன்ஸ் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் ருத்ரன். மேலும் அந்த படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனம் தான் கிடைத்தது.

ருத்ரன் படத்தில் வரும் பாடல் ஒன்றிற்காக பின்னணியில் ஆடும் நடன கலைஞர்களை ஏற்பாடு செய்து கொடுத்த ராஜ் என்பவர் சென்னை போலீசில் புகார் கொடுத்து இருக்கிறார்.

தான் 20க்கும் மேற்பட்ட நடன கலைஞர்களை அந்த பாடலுக்காக அழைத்து சென்றதாகவும், தொடர்ந்து 10 நாட்கள் ஷூட்டிங்கில் பங்கேற்ற நிலையில் அதற்கான சம்பளத்தை தற்போது வரை தரவில்லை என புகார் கொடுத்திருக்கிறார் அவர்.

எனினும் அது பற்றி மேனேஜர் ஸ்ரீதர் என்பவரிடம் கேட்டதற்கு பணம் தர முடியாது, எங்கு வேண்டுமானாலும் போய் புகார் செய்துகொள் என கூறி மிரட்டுகிறாராம். அத்தோடு  ஸ்ரீதர் தற்போது விஜய்யின் லியோ படத்தில் மேனேஜர் ஆக இருந்து வருகிறாராம்.



இதனைத் தொடர்ந்து பணம் கேட்டால் அடுத்து லியோ படத்திற்கு உங்களுக்கு சான்ஸ் கிடைக்க விட மாட்டேன் எனவும் கூறுகிறாராம்.

எனினும் தற்போது போலீசார் இது பற்றி விசாரித்து பணத்தை பெற்று தருவதாக தெரிவித்து இருக்கிறார்களாம்.


Advertisement

Advertisement