• Jul 25 2025

வசுவிற்கு வந்த ஆபத்து...கதறிய குடும்பம்...கடைசியில் நடந்த சம்பவம்.!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் தற்பொழுது சூப்பர் ஹிட்டாகவும் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பின் மத்தியிலும் ஒளிரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் 'தமிழும் சரஸ்வதியும்'.

இவ்வாறுஇருக்க தற்போது சரஸ்வதியும் தமிழும் குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்தாலும் வசுவொடு இருவரும் பேசிக்கொண்டு தான் உள்ளார்கள்.

இந்நிலையில் தற்போது ப்ரமோ ஒன்று வெளியாகி உள்ளது.அதில் வசு மாடிப்படியில் ஏறிக்கொண்டு இருக்கும் போது தவறுதலாக கால் வழுக்கி கீழே விழுந்து கதறி அழுகின்றார்.

இந்த வியடம் தெரிந்த சரஸ்வதி ஓடிவந்து ஹாஸ்பிட்டலில் சேர்த்து விடுகின்றார்.இந்த நேரம் வசுவிற்கு இரத்தம் தேவை எனக் கூற அதையும் தானே கொடுக்கின்றேன் எனக் கூறி சரஸ்வதி கொடுக்கின்றார்.இதனால் தாயும் சேயும் நலமாக உள்ளார்கள் என டாக்டர் வந்து கூறுகின்றார்.

இதற்கு வில்லியாக இருந்த வசுவின் தாய் திடீரென மனம் மாறி ரஸ்வதிக்கு நன்றி கூறுகின்றார்.இதனை அடுத்து தமிழின் தம்பியும் கை எடுத்து கும்பிட்டு நன்றி கூறுகின்றனர்.

இவ்வாறு எல்லோரும் மனம் மாறினால் மீண்டும் தமிழும் சரஸ்வதியும் ஒன்று சேருவார்களா என பொறுத்திருந்து பார்ப்போம்.

இதோ அந்த ப்ரமோ...





Advertisement

Advertisement