• Aug 25 2025

அன்பே வா சீரியலால் மஹாலக்ஷ்மி ரவீந்தரிற்கிடையில் வெடித்த சண்டை- நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சீரியல் நடிகை மஹாலக்ஷ்மி பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் இருவரும் கடந்த சில நாட்களுக்கு காதல் திருமணம் செய்து கொண்டார்.

அவர்கள் மாலையும் கழுத்துமாக புகைப்படம் வெளியிட்டபோது தான் அனைவருக்கும் அவர்கள் திருமணம் பற்றி தெரியவந்தது. தற்போது அது பற்றி தான் ஒரே பேச்சாக உள்ளது.

அதன் பின் இணையத்தில் கடும் விமர்சனங்களையும் அவர்கள் சந்தித்து வருகிறார்கள். மஹாலக்ஷ்மி பணத்திற்காக தான் ரவீந்தரை திருமணம் செய்துகொண்டார் என ட்ரோல்கள் வந்தது. மேலும் அவர் பணம் இல்லாத ஒருவராக இருந்தால் திருமணம் செய்துகொண்டிருப்பாரா எனவும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.



அத்தோடு அந்த ட்ரோல்களுக்கு எல்லாம் பதிலடி  கொடுக்கும்  விதமாக ரவீந்தர் மற்றும் மஹாலட்சுமி இருவரும் பேட்டிகள் கொடுத்து வருகிறார்கள்.

நேற்று ரவீந்தர் இன்ஸ்டாகிராமில் லைவ் வீடியோவில் பேசினார். மஹாலக்ஷ்மி நடித்து வரும் அன்பே வா சீரியல் இரவு 10 மணிக்கு பார்த்து முடித்துவிட்டு அதன் பிறகு 10.30க்கு தான் லைவ்வில் பேச வந்தனர்.

"நான் அன்பே வா சீரியலை பார்க்கணுமாம். 4 நாள் பார்த்திருந்தால் நான் இவளை டைவர்ஸ் செய்திருப்பேன்" என ரவீந்தர் தெரிவித்தார்.

'அய்யய்யோ இதை டைட்டில் ஆக போட்டு வைரல் ஆக்கிடுவாங்களே ' என கூறி அவரே கலாய்த்தும் கூறினார்.

Advertisement

Advertisement