• Jul 25 2025

அசீம் தரப்பால் கொலை மிரட்டல்..பிரபல யூடியூபர் பரபரப்பு புகார்-நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி இதுவரைக்கும் எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த சீசனில் பெரும் பரபரப்பும் சர்ச்சைகளும் சிக்கி இருக்கிறது.அத்தோடு இந்த சீசனில் வெற்றி பெற்றவராக சின்னத்திரை நடிகர் அசீம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது குறித்து ஆரம்பத்தில் இருந்து அடிக்கடி சர்ச்சைகள் வந்த வண்ணமாக இருக்கிறது.

அசீம் வெற்றி பெற்றது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. மேலும் ஒவ்வொரு வாரமும் அசீம் நாமினேஷன் ஆகி வந்தாலும் அவர் இறுதியில் காப்பாற்றப்பட்டு வந்தார். அது அவருடைய ரசிகர்களால் தான் என ஒரு தரப்பினர் கூறி வந்த நிலையில், இல்லை இது பிஆர் உதவியால் தான் அசீம் ஜெயித்திருக்கிறார் என்று இன்னொரு தரப்பினர் குற்றம் சுமத்தி வந்தனர்.



இவ்வாறு இந்த சீசனில் அரசியல் பிரமுகராகவும் நடிகராகவும் இருக்கும் விக்ரமன்தான் வெற்றி பெறுவார் என்று பலரும் கூறி வந்த நிலையில் கடைசி நேரத்தில் அசீம் வெற்றி பெற்றது பிரபலங்கள் பலருக்கும் அதிர்ச்சியாக இருப்பதாக தங்களுடைய சோசியல் மீடியாவில் கருத்து தெரிவித்து வந்தனர். அந்த வகையில் அசீம் வெற்றி பெற்றது முறைகேடு இருப்பதாக பிரபல யூட்யூபர் ஜோ மைக்கேல் ஆர்டிஐயில் தகவல் கேட்டு மனு அளித்திருந்தார்.

இவ்வாறுஇருக்கையில் மைக்கேல் அளித்த மனுவை திரும்பி பெற கூறி அசீம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் தன்னை மிரட்டுவதாக ஜோ மைக்கேல் சென்னை காவல் ஆணையர் ஆணையத்தில் புகார் அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த youtuber ஜோ மைக்கேல் தனியார் நிகழ்ச்சியில் வெற்றி குறித்து பெற்றது சர்ச்சை இருக்கும் நிலையில் அசீமின் வெற்றி குறித்து டெல்லியில் உள்ள இந்தியன் அறக்கட்டளையில் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியதாக தெரிவித்திருக்கிறார்.

இதனால் அசீம் மற்றும் அவருடைய நண்பர்கள் தேவராஜ், சிங்காரவேலன் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தான் அளித்த மனுவை திரும்ப பெற கூறி தொடர்ந்து தன்னை மிரட்டி வருவதாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு அளித்திருப்பதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.


அத்தோடு  பேட்டியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் அசீம் வின் பண்ணுனாருன்னு எல்லாருக்கும் தெரியும். அந்த விஷயத்தில் ஏதோ முறைகேடு நடந்திருக்கிறது என்று ஆர்பிஐயில் நான் பதிவு செய்திருக்கிறேன். அதை நான் பிரஸ்ஸில் எங்கும் போடவில்லை. என்னோட twitter பக்கத்தில் பகிர்ந்து இருந்தேன். அதை டெலிட் செய்ய சொல்லி அசீம் அவருடைய ஆதரவாளர்களான தேசிங்க சோழன், சிங்காரவேலன், இமான் அவர்கள் நான்கு பேரும் தினமும் மூன்று மணி நேரம் என்னைப் பற்றி யூடியூபில் அவதூறாக கருத்து தெரிவிக்கிறார்கள். பிறகு போன் பண்ணியும் என்னை மிரட்டுகிறார்கள்.அதில் அசீம் தான் மாஸ், அசீம் தான் கெத்து என்று கூறுகிறார்கள் என கூறி இருக்கிறார்.

Advertisement

Advertisement